நூலகத்தின் பயன்

       நூலகம் அறிவை வளர்க்கும் ஓர் இடமாகும். வாழ்வியல், வரலாறு, இலக்கியம், நிலநூல், மேற்கோள் நூல்கள், சிறுகதைகள், மனோதத்துவம், வார, மாத சஞ்சிகைகள், நாளிதழ்கள் அனைத்தும் நூலகங்களில் கிடைக்கும்.

    நம் நாட்டில் தேசிய நூலகம், மாநில நூலகம், என பொது நூலகங்களும்,மற்றும் நடமாடும் நூலகங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் படித்துப் பயனடையும் வகையில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

   நூலகத்தில் அறிவை வளர்க்கக்கூடிய பலதரப்பட்ட விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். நமது ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் விஷயங்களும் அங்குக் கிடைக்கும். மேலும், நமது மொழி வளத்தைப் பெருக்குவதற்கும் வாசிப்பைச் சரளமாக்குவதற்கும் நூலகம் முக்கியப் பங்காற்றுகிறது.

   “நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்று ஒளவையார் கூறியுள்ளார். நாம் எவ்வளவு படிக்கிறோமோ அந்த அளவிற்கு நமது அறிவு வளர்ச்சியடையும். அதற்கு முதுகெலும்பாகத் திகழ்வது நூலகமே.

   தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் நூலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மாணவர்களாகிய நாமும் நூலகம் தரும் பயம் அறிந்து அங்கு நூல் பல கற்று அறிவை வளர்த்துக் கொள்வோம்.

புறப்பாட நடவடிக்கையினால் ஏற்படும் நன்மைகள்

  புறப்பாட நடவடிக்கை மாணவர் பருவத்தில் இன்றியமையாததாக விளங்குகின்றது. வகுப்பில் கல்வியைப் பயிலும் மாணவர்கள் வகுப்பிற்கு வெளியே மற்ற திறன்களைக் கைவரப் பெறுவதற்குப் பள்ளிப் புறப்பாட நடவடிக்கை பெரிதும் துணைபுரிகிறது.

   பள்ளிப்புறப்பாட நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபடுவதால், அவர்கள் அடையும் நன்மைகள் எண்ணிலடங்கா. சீருடை இயக்கங்களில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள முடிகிறது. உதாரணமாக, கூடாரம் அமைத்தல், அணிவகுப்புப் பயிற்சி மற்றும் பிற நடவடிக்கைகளில் கலந்துக்கொள்ளும் பொழுது மாணவர்கள் பிறரை மதித்தல், ஒற்றுமை, கட்டொழுங்கு, தன்னம்பிக்கை, நாட்டின் மீது விசுவாசம், பிறர்பால் அன்பு செலுத்துதல் போன்ற நற்பண்புகள் மேலோங்கச் செய்கின்றது.மாணவர்கள் இவ்வாரான பண்புகளை கற்று, பின்பற்றும் பொழுது அவன் ஒரு சிறந்த நற்குடிமகனாகத் திகழச் செய்ய புறப்பாட நடவடிக்கை முக்கிய பங்காற்றுகின்றது. Continue reading

வாசிக்கும் பழக்கம்

வாசிக்கும் பழக்கம்

          ‘ஓதாமல் ஒருநாலும் இருக்க வேண்டாம்’ என்பது தமிழ் மூதாட்டி ஒளவையின் அருள் மொழியாகும். நாம் நாள்தோறும் வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதனால் நம் அறிவு வளரும்.

         ‘இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து’ என்பது பழமொழியாகும். மாணவப் பருவத்தில் இருக்கும்போதே கல்வியில் மிகுதியான ஈடுபாடும், அக்கறையும் முயற்சியும் கொண்டு கற்றால் எதிர்காலத்தில் சிறந்த நிலையை அடையலாம். பள்ளியில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூல்நிலையத்திற்குச் சென்று படிக்கலாம்.

‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

என்பது போல நாம் எந்த அளவுக்குத் தோண்டுகிறோமோ அந்த அளவுக்கு நீர் மணற்கேணியில் ஊறும். அதுபோல எந்த அளவுக்குக் கல்வி கற்கிறோமோ அந்த அள வுக்கு அறிவு பெருகும். ஆகவே, நாம் நேரத்தை விரையம் செய்வதை விட வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளலாம். இதனால் நம் கல்வியறிவையும் பொது அறிவையும் வளப்படுத்த முடியும்.

          நமது அரசாங்கம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கப் பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டம்தோறும் பொது நூல்நிலையம் அமைத்துள்ளது. இவற்றை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மும்மொழி நூல்களையும் படித்து வருவது மிகுந்த பலனை அளிக்கும். இதனால் மும்மொழிகளிலும் நாம் சிறந்து விளங்க முடியும்.

          நாம் பல இன மக்களோடு எளிமையாக உரையாடவும் நட்புறவை மேம்படுத்தவும் சுலபமாக இருக்கும். அது மட்டுமல்லாது நம் கல்வித் தரமும் உயருகிறது. ஆகவே, மனிதர்களாகிய நாம் கண்டிப்பாக கல்வியறிவை பெற்றிருக்க வேண்டும்.

கணினியின் அவசியம்

கணினியின் அவசியம்

          இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவாசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்து கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது.

       மனிதன் கண்டுப்பிடித்த அரிய கருவி கணினி. கணினிப் பொறியின் பயன்பாட்டினால் மனிதர்களின் வேலை வாய்ப்பு குறையும் எனும் ஐயம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், இன்றோ மனிதனுடைய எல்லாத் தேவைகளுக்கும் கணினியே முக்கியமாக விளங்குகின்றது. கல்வித்துறை, அறிவியல் துறை, தொழில்துறை, மருத்துவத் துறை, இராணுவத் துறை, போக்குவரத்துத் துறை என்று பல துறைகளில் கணினியின் பங்கு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.

      கணினிப் பொறியினால் மனிதன் மிகக் குறைந்த நேரத்தில், வேலைகளை மிகச் சரியாகச் செய்ய முடிகிறது. ஓரே இடத்தில் இருந்து கொண்டு மின்னஞ்சல் மூலம் உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள முடிகிறது; உடனுக்குடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள முடிகிறது. இதனால் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளும் முறை குறைந்து வருகிறது.

     வங்கிகளில் கணினியின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வங்கியில் பணம் போடுவதும் எடுப்பதும்கூட கணினி மூலம் நடைபெறுகிறது. இந்தச் சேவையை அலுவலக நேரத்திற்குப் பிறகும் பெற முடியும். அதனால் வங்கியில் முன்போல் வரிசைப்பிடித்து அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.
விமான நிலையங்கள், பேருந்து மற்றும் இரயில் நிலையங்களில் கணினியின் மூலம் பயணச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். வீட்டிலிருந்து கொண்டே கணினி மூலம் பயணச் சீட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். இதனால் மனிதர்களுடைய நேரமும், சிரமமும் குறைகின்றன.

     விண்வெளி ஆய்வை மேற்கொள்ள கணினியே முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆய்வைத் திட்டமிடவும் செயல்படுத்தவும் கணினி பெரிதும் உதவுகிறது. பூமிக்கும் விண்வெளிக்கும் இடையே கணினி மூலம் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. மனித முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் கணினியை அனைவரும் பயன்படுத்திப் பயனடைவோம்.

வாசிப்பின் அவசியம்

 வாசிப்பின் அவசியம்

          பள்ளியில் தினமும் பலவிதமான படிக்கின்றோம். அவை அந்தந்தப் பாடங்கள் சம்பந்தப்பட்டவையாகும். இவற்றைப் படித்துவிட்டு நான் தினமும் படிக்கின்றேன் என்றால் தவறாகும். பள்ளிப் பாடங்கள் மட்டும் நம் அறிவை வளர்க்காது. பாடங்கள் சம்பந்தப்பட்ட மேலும் பல தகவல்களைப் பெற நாம் வேறு பல நூல்களை வாசிக்க வேண்டியது அவசியமாகிறது.

         ஒரு மொழியில் புலமை பெற அம்மொழியில் வெளிவந்துள்ள பல புத்தகங்களை வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசிப்பதனால் அம்மொழியில் நாம் புலமை பெற முடியும். மொழி வளத்தைப் பெருக்கி கொள்ள முடியும். ஒரு மொழியில் உள்ள பல புதிய சொற்களை அறிய அம்மொழி நூல்களை வாசிக்க வேண்டும். அத்துடன் அவற்றின் பொருளை உணர்ந்து சரியான முறையில் பயன்படுத்தவும் வாசிப்பு அவசியமாகிறது.

        மொழி வளத்தைப் பெருக்கும் அதே வேளையில், பொது அறிவையும் வாசிப்பதன் மூலம் வளர்த்துக் கொள்ள முடியும். பல துறைகளைச் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதால் அத்துறைகளைப் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள முடிகிறது. இடன் மூலன் நாம் தகவல் அறிந்த சமுதாயமாக மாற, வாசிப்பு துணைபுரிகிறது.

        இந்த நவீன உலகில் மனிதன் இயந்திரமாக வழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வியந்திர வாழ்க்கையிலிருந்து மீண்டு மனமகிழ்வு பெறவும் வாசிக்கும் பழக்கம் உதவுகிறது. கடை, கட்டுரை, கவிதை.,செய்யுள் போன்றவற்றை வாசிப்பதன் மூலம் அவற்றின் சுவையை உணர்ந்து இரசிப்பது மனம் மகிழ்கின்றது.

        சொந்தமாகக் கதை, கட்டுரை, கவிதை எழுத விரும்புகிறவர்கள் முதலில் அவை தொடர்பான பல நூல்களைப் படித்து அறிய வேண்டும். அப்போதுதான் சொந்தப் படைப்புகளைப் படைக்கும் போது அவை தரமானவையாக இருக்கும். பல தகவல்களைத் தன்னுடைய படைப்புகளில் புகுத்த முடியும்.

        எனவே, வாசிப்பு நமக்கு எவ்வளவு அவசியமாகிறது என்பதை அறிய முடிகிறது. ”நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்பதற்கேற்ப பல நூல்களை வாசித்து நம் அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.

i) இணையத்தின் பயன்பாடு

பத்தி 1
முன்னுரை
- அன்றாட வாழ்க்கையில் – கணினி முக்கிய பங்கு
- அறிவியல் – தொழில்நுட்பம் – வளர்ச்சி
- இணையத்தின் பயன்பாடு – முதன்மை
- தொடர்புச் சாதனம்

பத்தி 2
- கல்வி – புதிய விஷயங்கள் – சேகரித்தல்
- இணையத்தில் தேடல்
- தலைப்புக்கு ஏற்ற விபரங்கள் திரட்டுதல் / தேடுதல்
- நேரடித் தொடர்பு வழி கற்றல், கற்பித்தல்
- பயிற்சிகள் – சுயவளர்ச்சி துணைபுரிகிறது.

பத்தி 3
- தொழிற்துறையில் அதன் பங்கு
- ஒவ்வொரு வேலையும் – எளிதில் செய்ய முடிகிறது.
- நேரத்தை மிச்சப்படுத்தப்படுகிறது
- உலக நாடுகளுடன் நேரடி வியாபாரத் தொடர்பு

பத்தி 4
- மருத்துவதுறையில் / விவசாயத்துறையில் புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ள
- கருத்து பறிமாற்றம் செய்து கொள்ள
- விண்வெளிதுறையில் ஆய்வுக்கு
- பொழுது போக்கு சாதனம்
-

பத்தி 5 – முடிவுரை
- வாழ்க்கை தேவைகளில் ஒன்றாகிவிட்டது
- அதனைப் பயன்படுத்தி நன்மைபெறுவோம்.
- அறிவாற்றல் மிக்க சமுதாயமாக உயர்வோம்.