எனக்கு பறக்கும் சக்தி கிடைத்தால்

நிலைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நாம் எண்ணும் அனைத்தும் கை கூடுவது முயற்கொம்பாகும். ஆனால், சிறு வயதிலிருந்தே எனக்கு பறக்கும் சக்தி கிடைக்க வேண்டும் என்ற ஆசை என் மனதில் வண்ணத்துப் பூச்சிபோல் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறது.

திடீரென்று, எனது ஏக்கல் குரல் ஆதி அந்தம் இல்லா அந்த இறைவனின் செவிகளுக்கு எட்டி என்னால் பரக்க முடிந்தால், மனதிற்குள் குடிசையாய் கட்டிக் கொண்டிருக்கும் ஆசைகள் ஒவ்வொன்றையும் நிறைவெற்றிக் கொள்வேன்.

நாம் நிலத்தில் இருந்து பார்க்கும்பொழுதே பூமியின் தோற்றம் நம் மனதைக் காந்தம் இரும்பை ஈர்ப்பதுபோல் கவர்ந்துவிடுகிறது. இதையே வானத்தில் இருத்து இரசித்தால் எப்படி இருக்கும் நண்பர்களே? நீல வானும் நீலக்கடலும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருக்கும் தோற்றமும் காற்றின் சக்தியால் உருண்டு விளையாடிக் கொண்டிருக்கும் சிற்றலைகளின் விளையாட்டும்….. ஆஹா! சொல்லும் சீனி போல் இனிக்கிறதே! இக்காட்சியை வானத்தில் பறந்தபடியே கண்டு ரசித்தால் எப்படி இருக்கும்!

மேலும், நான் எந்தப் பணச்செலவும் இல்லாமல் இலவசமாக, கல்பனா, ஆம்ஸ்ட்ரோங் போன்ற பல விண்வெளி வீரர்களைப் போல விண்வெளியில் கால் பதிப்பேன். சில ஏழை எளியோர்களையும் உடன் அழைத்துச் சென்று விண்வெளியில் புகைப்படம் எடுத்துக் கொள்வேன். இதனால், என் மனம் உவகையடைவதோடு மற்றவரையும் உவகையடையச் செய்ய முடிகிறது.

அது மட்டுமா நண்பர்களே? சுனாமி பேரிடரால் பல அப்பாவி மக்கள் தங்கள் உறவினரையும் உடைமைகளையும் இழந்து அனலிலிட்ட மெழுகுபோல வேதனையடைந்து வருகின்றனர். அறம் செய விரும்பு என்ற ஆத்திச்சூடிக்கு ஏற்ப நான் என்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு வழங்குவேன். அவர்களின் துன்பங்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல விரைவாக நீங்க என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

இப்படி இன்னும் பல ஆசைகள் என் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்தையும் என்னால் பறக்க முடிந்தால்தான் நிறைவேற்றிக் கொள்ள முடியும். என்னுடைய ஏக்கக்குரல் உண்மையாகவே இறைவனின் செவிக்கு எட்டி எனக்குப் பறக்கும் சக்தி கிடைத்தால் என் மனம் இறைவனுக்கு மலர்த்தூவி நன்றி கூறும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s