வாக்கியம் அமைத்தல் ல,ழ,ள

1.கொல்ல
– அக்கொள்ளையன் செய்த அட்டூழியங்களைச் சகித்துக் கொள்ள முடியாத மன்னன் கையிலிருந்த வாளை உருவி அவனைக் கொல்ல முயன்றான்.

2.கொள்ள
– அவனுடைய தீயப் பழக்க வழக்கங்களைக் கண்ட நான் அவனை நண்பனாய் ஏற்றுக் கொள்ளவில்லை.

3.புகல்
– எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ள ஓடிய அவ்வரசன் அண்டை நாட்டில் புகலிடம் தேட முயன்றான்.

4.புகழ்
– நம் நாட்டுப் பிரதமர் நாடு முன்னேற்த்திற்குச் செய்யு பல அரிய காரியங்களால் அவரது புகழ் எங்கும் பரவியது

5.வலி
– அம்முதியவர் சில நாட்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

6.வழி
– காட்டு வழியாகச் சென்ற அவ்விரு மாணவர்கள் கரடியைப் பார்த்ததும் மரத்தில் ஏறிக் கொண்டனர்.

7.விலக்கி
– காற்பந்து விளையாட்டின் போது ஏற்பட்ட அவ்விரு விளையாட்டாளர்களின் சண்டையை நடுவர் விலக்கி விட்டார்.

8.விளக்கி
– கணிதப் பாடத்தில் எனக்கு விளங்காத பிரச்சனைக் கணக்குகளை ஆசிரியர் விளக்கினார்.

9.கொல்லி
– சந்தனக் கடத்தல் வீரப்பனின் தோழர்கள் கொல்லி மலையில் உலாவுவதாக கூறுகின்றனர்.

10.கொள்ளி
– முருகம்மாள் ஆத்திரம் தாளாமல் அடுப்பிலிருந்து கொள்ளிக் கட்டையை எடுத்து அப்பூனையின் மீது வீசினாள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s