நான் கோடிஸ்வரனானால்…

பணம்.. வாழ்வின் எல்லாத் தேவைகளுக்கும் அடிப்படை. நன்றாகச் சம்பாதிக்க வேண்டும்; மகிழ்வடன் வாழ வேண்டுமென்பது அனைவரின் கனா. பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் எனக் கூறுவர். அத்தகைய பணம் கொழிக்கும் கோடிஸ்வரனானால்… கற்பனைக் குதிரைகளைச் சற்றுத் தட்டி விட்டேன்..

நான் ஒரு கோடிஸ்வரனானால், முதலில் என் கற்பனை இல்லத்தைக் கட்டுவேன். என் கனவுகளில் மிதந்து கொண்டிருக்கும் அந்த இல்லத்திற்கு ஒரு வடிவம் கொடுப்பேன். மிக நவீன வீடாகவும் அதீத பாதுகாப்பு நிறைந்ததாகவும் அவ்வில்லம் இருக்கும். வீடா..அது.. அரண்மனை என்று பார்ப்போர் வாயைப் பிளக்கும் அளவுக்கு அது இருக்கும். மேலும், அதிநவீன வாகனம் ஒன்றையும் எனக்கும் என் குடும்பத்திற்கும் வாங்குவேன். அவ்வாகனத்தில் இந்த அழகிய மலேசியாவையே வலம் வருவேன்.

அதுமட்டுமல்லாமல், என்னை வளர்த்து ஆளாக்கிய என் பெற்றோரை மகாராஜா, மகாராணி போல் வைத்திருப்பேன். அவர்கள் எந்த வேலையையும் செய்யாமல் பார்த்துக் கொள்வேன். அவர்களைக் கவனிக்க மூன்று நான்கு வேலைக்காரர்களை அமர்த்துவேன். அவர்களின் எல்லாத் தேவைகளையும் வேலைக்காரர்கள் கவனித்துக் கொள்ளுமாறு செய்வேன்.

நான் ஒரு கோடிஸ்வரனானால் உலக நாடுகள் அனைத்தையும் சுற்றிப் பார்ப்பேன். அத்தகைய நாடுகளில் மிக விலையுயர்ந்த நட்சத்திர விடுதிகளில் தங்குவேன். உலகின் மிக அற்புதமான உணவு வகைகளை இரசித்து உண்பேன். சினிமாக்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்த நாடுகளை நேரடியாகப் பார்த்து அகம் மகழ்வேன். அத்தகைய நாடுகளுக்கு என் பெற்றோரையும் அழைத்துச் செல்வேன்.

இந்தச் சமூகத்தை மறக்க முடியுமா ? என்னைச் சமுதாயத்தில் மிக உயர்ந்த மனிதனாக உயர்த்திக் கொள்வேன். கோவில், பள்ளிக்கூடங்கள், அன்பு இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றிற்கு என்னால் ஆன பண உதவிகளை வழங்குவேன். கல்வியில் மிகச் சிறந்த மாணவர்களுக்கு நிதியுதவி செய்வதற்காக ஒரு அறவாரியம் அமைப்பேன். அவ்வற வாரியத்தின் வழி, அவர்கள் மேற்கல்வியைத் தொடர உதவி புரிவேன்.

மேலும், என் சொத்துகளைப் பெருக்கிக் கொள்ள பல புதிய சொத்துக்கள் வாங்குவேன். நிலம், விடுதிகள், முதலீடு போன்றவற்றின் வழி என் பணத்தைப் பெருக்க முயற்சி மேற்கொள்வேன். வெளிநாடுகளிலும் என் வர்த்தக இறக்கைகளை விரித்துப் பறப்பேன். உலகமே பேசும் வண்ணம் ஒரு மிகச் சிறந்த தொழிலதிபராவேன்.

ஆஹா.. கோடிஸ்வர வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்யும் போதே இனிக்கிறதே! நான் கோடிஸ்வரனானால் என் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s