அறிக்கை
உன் பள்ளியில் நடத்தப்பட்ட தேசிய தினக்கொண்டாட்டம் குறித்து அறிக்கை ஒன்றினைத் தயார் செய்க.

தேசிய தினக்கொண்டாட்ட அறிக்கை
தேசிய வகை தமிழ்ப்பள்ளி பத்தாங் மலாக்கா

கடந்த 30.8.2010, திங்கள் கிழமையன்று, நாட்டின் 53 ஆவது தேசிய தினம் பள்ளி அளவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழா பள்ளி வளாகத்தில் ஒரே மலேசியா எனும் கருப்பொருளில் இவ்விழா கொண்டாடப்பட்டது. மாணவர்களிடையே நாட்டுப்பற்றை உருவாக்கும் நோக்கில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்களுடன் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் அங்கமாக சிறப்புச் சபைகூடல் நடைபெற்றது. தேசியப் பண், மாநிலப் பண்ணுக்குப் பிறகு மலேசிய பெர்ஜாயா, சத்து மலேசியா போன்ற பாடல்கள் பாடப்பட்டன. அதைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் அவர்கள் உரை ஆற்றினார். தொடர்ந்து, கல்வி அமைச்சர் உரை, கல்வி இயக்குனர் உரை, மாநிலக் கல்வி இயக்குநர் உரை போன்றவற்றை ஆசிரியர்கள் வாசித்தனர். அதன் பின், நாட்டுப் பற்றை பறைசாற்றும் வகையில் மாணவர்களின் படைப்புகள் இடம் பெற்றன. சில மாணவர்கள் நாட்டுத் தலைவர்கள் போன்று வேடமிட்டு அசத்தினர்.

அடுத்த அங்கமாக, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தேசிய தின மாதம் தொடர்பாக பள்ளியில் நடத்தப்பட்ட பலவகை போட்டிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் பரிசுகளைத் தலைமையாசிரியர் அவர்கள் எடுத்து வழங்கினார். ஒருசில பரிசுகளைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அவர்களும் எடுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவுக்காக தங்கள் மிதிவண்டிகளைத் தேசியப் பற்றுடன் அலங்கரித்த மாணவர்களுக்காகவும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியின் உச்சங்கட்டமாக மாணவர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. மாணவர்கள் தேசியக் கொடியுடன் பள்ளி வளாகத்தை வலம் வந்தது கண்கொள்ளாக் காட்சியாகும். இறுதியில், மாணவர்கள் அனைவருக்கும் ஒரு சிறிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விருந்தில் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர். ஏறக்குறைய மதியம் 1.00 அளவில் இத்தேசிய தினக்கொண்டாட்டம் ஒரு நிறைவை எய்தியது. நன்றி.

அறிக்கை தயாரிப்பு, 7 ஆகஸ்டு 2011
…………………………
( கவிதன் த/பெ மணிவண்ணன் )
செயலாளர்,
தேசிய தினக் கொண்டாட்ட ஏற்பாட்டுக் குழு
தேசிய வகை தமிழ்ப்பள்ளி பத்தாங் மலாக்கா

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s