கிராமப்புற வாழ்க்கையைவிட நகற்புற வாழ்க்கையே சிறந்தது.வாதித்து எழுதுக.

         துரித வளர்ச்சி கண்டுவரும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று.நாட்டின் வளர்ச்சிக்கேற்ப நமது வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக்கொள்ளவேண்டும்.நமது வாழ்க்கை தரம் மேம்படுவதற்குக் கிராமப்புற வாழ்க்கை விட நகர்ப்புற வாழ்க்கையே மிகச் சிறந்ததாகும்.

         மனிதனின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்குக் கல்வி மிகவும் தேவை.கல்வியைப் பெறுவதற்கான பல வசதிகள் நகர்ப்புறங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.தொடக்கப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள் தவிர்த்து உயர்கல்வியைத் தொடர்வதற்கும் நகர்ப்புறங்களில் வாய்ப்புகளும் வசதிகளும் அதிகமாக உள்ளன.உதாரணத்திற்குப் பல கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் நகர்ப்புறங்களிலேயே அமைந்திருக்கின்றன என்பது வெள்ளிடை மலையாகும்.

        தற்காலத்தில், மனிதன் பல்வேறான நோய்களுக்கு ஆளாகிறான்.இந்நோய்களுக்கான மருத்துவ வசதிகள் நகர்ப்புறங்களிலே மலிந்து காணப்படுகின்றன.அதோடு, இப்பொழுது அதிகமான விபத்துகள் நடக்கின்றன.விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க நகர்ப்புறங்களில் காணப்படும் மருத்துவமனைகளும் மருத்துவ நடுவங்களுமே பெரும்பங்காற்றுகின்றன.

       நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளான்கள் போல ஆங்கங்கே தொழிற்சாலைகளும் தொழிற்பேட்டைகளும் நகர்ப்புறங்களில் அதிகமான உருவாகி வருகின்றன.இவை நமது மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றன.குறிப்பாக பெட்டாலிங் ஜெயா, தாசேக், பிறை போன்ற நகர்ப்பகுதிகளில் வேலை வாய்ப்புகளுக்குப் பெயர்பெற்ற இடங்களாக விளங்குகின்றன.

      ஆகவே, கிராமப்புற வாழ்க்கையைவிட நகர்ப்புற வாழ்க்கையே சிறந்தது என்பது ஆணித்தரமான உண்மையாகும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s