நான் ஒரு சவர்க்காரம்

நான் ஒரு சவர்க்காரம்

          ‘மணமும் மனமும் மணமணக்கும் மேனி பள பளக்கும் ஆஹா என்ன அற்புதம் ! ஆஹா என்ன ஆச்சரியம்’ அனைவரின் வாயில் முனுமுனுத்துக் கொண்டிருக்கும் பாடலை கேட்டதும் அனைவரின் எண்ணமும் என்னை ஒரு கணமாவது யாரென்று நினைக்கத் தோன்றும்! ..வழ வழப்பான மேனியைக் கொண்ட நான் பல ரசாயனக் கலவைகளால் உருப்பெற்றேன். அழுக்கைப் போக்கி சுத்தத்தைப் பேணுவதில் எனக்கு நிகர் எவரும் இல்லை.

          இவ்வளவு சிறப்புக் கொண்ட நான் கோலசிலாங்கூரில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவன். செம்பனை எண்ணெயிலிருந்து தயாரிக்கப் பட்ட நான்  பல வடிவங்களிலும் பல பெயர்களிலும் வெளிக்கொணரப் பட்டேன். என்னுடன் பல நண்பர்களும் உருவாக்கப்பட்டனர். கோலாசிலாங்கூரில் தயாரிக்கப் பட்ட நான் வானூர்தி மூலம் பினாங்கு மாநிலத்திற்கு அனுப்பப்பட்டேன். வானூர்தியில் முதல் முறையாக ஏறியதால் உல்லாச வானில் சிறக்கடித்துப் பறந்தது போல் இருந்தது.

        சில மணி நேரங்களுக்குப் பிறகு, நாங்கள் முத்துத் தீவில் கால் பதித்தோம். பிறகு எங்களை பல விற்பனை மையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டோம்.நாட்கள் வாரமாகின, வாரம் மாதமாகின, அதற்கிடையில் ஒரு பெண்மனி என்னை ரிங்கிட் மலேசியா ஐந்துக்கு விலை கொடுத்து வாங்கினார். என்னுடைய பயன்பாட்டிற்கு எதிர்மாறாக, என்னுடைய எஜமானி என்னைப் பயன்படுத்தப் போவதாக தன் தங்கையிடம் கூறினாள். அதனைக் கேட்ட என் மனம் பட்டாம்பூச்சிபொல்ல் படபடத்தது.

        மறுநாள், என் எஜமானி என்னை அனைவரும் வியக்கும் வகையில் ஓர் அழகான கைவினைப் பொருளாக மாற்றினாள். நான் எழில் கொஞ்சும் மெழுகுவர்த்தி வடிவிற்கு மாற்றப்பட்டேன். அப்பொழுது என்னைப் பார்க்க இரண்டு கண்கள் போதாது என்றே தோன்றியது. என் அழகு என்னையே பிரமிக்க வைத்தது.

         என் எஜமானி என்னை தனது மகனின் பிறந்த நாள் பரிசாக வழங்கினார். எஜமானின் மகளும் அந்த நொடி முதல் என்னை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டாள். அன்று முதல் இன்று வரை நான் அவளது படிப்பறையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறேன்.அவள் தினமும் என்னைக் கவனித்துக் கொண்டே வேலைகளைச் செய்வாள். என் நிலைமை என்ன ஆகுமோ என்று கவலைப்பட்ட நான் இன்று உயிரோடு உலாவுவதை எண்ணி உச்சிக்குளிர்கிறேன்.

Advertisements

2 thoughts on “நான் ஒரு சவர்க்காரம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s