எனக்கு இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி கிடைத்தால் …

                    எனக்கு இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி கிடைத்தால் …

       இப்பூவுலகில் மனிதன் இறப்பதும் பிறப்பதும் இயற்கையே! இருந்த போதும் இறப்பை ஏற்க மனம் விரும்புவதில்லையே என்று எண்ணுகையில் எனக்கு இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றல் கிடைத்தால் எப்படியிருக்கும் என்று தோன்றியது.

      ஒருகால் எனக்கு இச்சக்தி கிடைத்தால் இறப்பைத் தடுத்து நிறுத்துவேன். இதனால் அன்பான பல உள்ளங்கள் மனம் வருந்தி வாழ்வதை என்னால் மாற்றி அமைக்கும் சந்தர்ப்பம் கிட்டும். குடும்பத்தினர், உற்றார் உறவினர், நண்பர்கள், பொது மக்கள் அனைவரையும் இறவாமல் உயிர்ப்பித்துக் கொடுப்பேன். இதன் வழி தனித்து வாழும் தாய்மார்கள் இல்லாமல் செய்வேன்.

      இந்தச் சக்தியைக் கொண்டு நான் நமது தெய்வப் புலவரான திருவள்ளுவரை உயிர்ப்பிப்பேன். தமிழ் கூறும் நல்லுகுக்கு மட்டுமல்லாது உலக மக்களுக்கே பொதுவான திருக்குறளை எழுதிய இவரை அனைவரும் பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றுத்தருவேன். அவரைப் பல கருத்தரங்குகளில் உரையாற்றி மக்கள் மனதில் வன்மம், முறையற்ற சிந்தனை போன்றவற்றை வேருடன் அழிப்பேன்.

      இவரைப்போன்ற ஓளவை பிராட்டியாரையும் பாரதியாரையும் உயிர்ப்பித்து தமிழ் தொண்டாற்ற வைப்பேன். அவர்களைத் தமிழ்ப்பள்ளிகளுக்கெல்லாம் அழைத்துச்சென்று செய்யுள், பாடல்கள், கவிதைகள் போன்றவற்றைக் கற்றுத்தர வைப்பேன். இதன்வழி தமிழ்மொழி வளர பெறும் பாடுபடுவேன். மக்கள் மனதில் விழிப்புணர்வையும் ஊட்டுவேன். நமது இனத்தின் மாண்புகளை அறியச்செய்து மொழியின் அழிவைத் தடுத்து நிறுத்துவேன்.

     மொழி, இனம் என்று மட்டும் இல்லாமல் மனித நேயத்தையும் மனதில் கொண்டு அன்னை திரேசா அவர்களையும் உயிர்ப்பிப்பேன். ‘உயிர்களிடத்தில் அன்பை வை’ எனும் தத்துவத்தை உணர்த்தியதோடல்லாமல் மனித நேயத்திற்குத் தாயாக விளங்கிய அந்த அன்னைக்கு இறப்பே இல்லை என்பதனை மக்களுக்கு உணர வைப்பேன். அன்னை திரேசா அவர்களை உலகின் அனைத்துப் பகுதிக்கும் அழைத்துச் சென்று மக்கள் மனதில் மனித நேயத்தை விதைப்பேன். இவ்வளவும் செய்யும் அந்த அன்னைக்கு நான் சேவை செய்பவனாகவும் விளங்குவேன். இப்படி ஒரு சக்தி கிடைக்கும் என்று நானும் காத்திருக்கிறேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s