நான் ஒரு பள்ளிக் காலணி

        இன்று நானோ தனிமையில் தவிக்கிறேன். என்னிடம் அன்பு செலுத்தவோ, பரிவு காட்டவோ எவருமில்லை. என்  நினைவலைகள் கடந்த காலத்தை நோக்கிச் சென்றன. 30.7.2011 என் பிறந்த நாள்.நான் மல்லிகைப் போன்ற வெள்ளை வண்ணத்தில் காட்சியளிப்பேன்.நான் ரப்பராலும், துணியாலும் தயாரிக்கப்பட்டேன்.  நான் குறிப்பாக பள்ளிச் சிறுவர்களுக்காகவே உருவாக்கப்பட்டவன். இப்பொழுது தெரிகிறதா நான் யார் என்று? ஆம் நான் தான் பள்ளிக் காலணி. என் பெயர் “பாலாஸ்”. என்னுடன் ஆயிரக்கணக்கான நண்பர்கள் பிறந்தார்கள். ஒருநாள் எங்களை ஜப்பான்  தொழிற்சாலையிலிருந்து , மலேசியாவிற்க்கு விமானம் மூலம் ஏற்றுமதி செய்தனர்.

     இரண்டு மணி நேரப்பயணத்திற்குப் பிறகு, நாங்கள் அனைவரும் மலேசிய துறைமுகத்தை அடைந்தோம். அங்கு எங்களைக் கனவுந்தில் ஏற்றி அங்குள்ள “ஜஸ்கோ” எனும் பேரங்காடிக்குக் கொண்டு சென்றனர். எங்களை அங்குள்ள வேலையாட்கள்  கண்ணாடிப் பேழைக்குள் அடுக்கி , என் மேல் ரிங்கேட் 60 என் ஒட்டப்பட்டது. பள்ளி திறப்பதற்கு ஒரு மாதம் இருந்தது, எங்களை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்குப் புற்றிசல் போல் பேரங்காடிக்கு வந்த வண்ணமாக இருந்தனர். ஒரு மாணவி தன் தாயாருடன் வந்து என்னைத் தன் கால்களில் அணிந்தால்,பின் அவள் என்னை விலை கொடுத்து வாங்கி, அவள் வீட்டிற்குக் கொண்டு சென்றாள்.

     காலை வெயில் என் கண்களை கூசின. யாரோ என்னைப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்தனர். அவள் பெயர் தமிழரசி. அவள் பள்ளிச் சீறுடையில் அவளின் பெயரை அறிந்து கொண்டேன். விரைவாக என்னைத் தன் கால்களிள் அணிந்து கொண்டு பள்ளிக்கு விரைந்தாள். ஐயோ, அம்மா  உடம்பெல்லாம் வலிக்கிறதே! நடக்கும் பாதையெல்லாம் அசுத்தமாகவும் அறுவருப்பாகவும் உள்ளதே! இதில் எவ்வளவு நாள் என் பயணமோ! முதல் நாளே வாழ்க்கை வெறுத்து விட்டது.

    பள்ளி முடிந்து வீட்டை அடைந்த என் எஜமானி, என்னைக் குளியல் அறைக்குத் தூக்கிச் சென்று, ஷாம்புவால் குளிப்பாட்டி, வெள்ளை பூசி, வெயிலில் உலர வைத்தார். நாட்கள் கடந்தன, அம்மாணவி என்னை மிகவும் தூய்மையாக பராமரித்து வந்தாள். சக நண்பகளுடன் ஒப்பிடுகையில் நான் அதிர்ஷ்ட்டசாலி. ஏனெனில், முதல் நாளே வாழ்க்கையை வெறுத்திருந்தாலும் , என் எஜமானியின் அளவிலா அன்பினாலும் , அரவணைப்பாலும் நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். இவ்வேளையில் என் குறல் என் எஜமானிக்குக் கேட்டிருந்தால் அவருக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

  மகிழ்ச்சியான என் வாழ்க்கைப் பயணத்தில் ஒருநாள்……. வருடங்கள் நகர என் எஜமானி பெரிய மாணவியானால், நானோ அவருடைய கால்களுக்குப் பொருந்தவில்லை. அவள் புதியதாக ஒரு காலணியை வாங்கினாள். பயன்படுத்த முடியாத நான் இன்று ஒரு இருண்ட பெட்டியில் அனாதையாக அடைப்பட்டுக் கிடக்கிறேன்.

Advertisements

6 thoughts on “நான் ஒரு பள்ளிக் காலணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s