அறிக்கை – சிற்றுண்டி தினம்

பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி

சிற்றுண்டி தினவிழா அறிக்கை

       கடந்த 30.7.2011 வெள்ளியன்று பத்தாங் மலாக்க தமிழ்ப்பள்ளியில் சிற்றுண்டி தினம் சிறப்பாக நடைந்தேறியது.பள்ளியிலுள்ள எல்லா மாணவர்களும், ஆசிரியர்களும் மற்றுமின்றி பெற்றோர்களும் இச்சிற்றுண்டி  தினம் சிறப்பாக நடைப்பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கினர்.

       ஒருவாரத்திற்கு முன்பே ஆசிரியை கமலம் கூப்பன்களைத் தயாரித்து எல்லோரிடமும் விற்பனைச் செய்தார். அன்றைய தினம் அனைவரும் பணத்திற்குப் பதிலாகக் கூப்பன்களையே பயன்படுத்த வேண்டும். சிற்றுண்டி தினத்தன்று ஆசிரியர்களும், மாணவர்களும் நிறைய உணவுகளைச் சமைத்து எடுத்து வந்திருந்தனர். எட்டு உணவு கூடாரமும் இரண்டு கேளிக்கை விளையாட்டுக் கூடாரமும் அமைக்கப்பட்டிருந்தது.

       ஒவ்வொரு கூடாரத்திற்கும் இரண்டு பொறுப்பாசிரியர்களும்  பத்து மாணவர்களும் நியமிக்கப்பட்டனர். உணவுகள் ஒவ்வொரு கூடாரத்திற்கு ஏற்ப தனித் தனியே வகைப்படுத்தப்பட்டன. அவை கோழி சம்பல்,’நாசி ஆயாம்’,’நாசி லேமாக்’, தோசை, இட்டிலி, விரைவு உணவான ‘பெகர்’, ‘நாகெட்’, ’ஹொட் டோக்’, குளிர் பானங்கள், மற்றும் பழங்களும் உள்ளடங்கும். உணவுகள் மிக சுத்தமாகவும் மற்றவை ஈர்க்கும் வண்ணமுமாய் இருந்தது. விலை பட்டியலும் ஒட்டப்பட்டியிருந்தது.

       இரு கூடாரங்களில் கேளிக்கை விளையாட்டுகள் தயார் செய்யப்பட்டன. இதற்கு கூப்பன் 50 சென்னும், கூப்பன் ரி.மா 1.00 பயன்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. காலை மணி 10.00க்குச் சிற்றுண்டி தினம் ஆரம்பமாகியது. வருகை புரிந்திருந்த பெற்றோரும், மாணவர்களும், ஆசிரியர்களும், கூப்பன்களைக் கொண்டு அவரவருக்குப் பிடித்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து வாங்கினர். வியாபாரம் நன்றாகச் சூடுப்பிடித்தது.

       பல மாணவர்கள் விரைவு உணவுகளை அதிகமாக வாங்கி உண்டனர். ஏனென்றால், அவ்வுணவு சுடசுட பொரித்துத் தரப்பட்டது. இருப்பினும், ‘நாசி ஆயாம்’, ‘நாசி லேமாக்’ போன்றவற்றை அதிகமானோர் விரும்பி வாங்கினர். குளிர் பானங்கள் பல வர்ணங்களில் மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் இருந்ததால், மாணவர்கள் விரும்பி வாங்கினர்.

      ஆண் மாணவர்கள் பெரும்பாலோர் விளையாட்டு கூடாரங்களைச் சூழ்ந்து கொண்டனர். மாணவர்களும் விளையாட்டுகளை குதூகலத்தோடு விளையாடி மகிழ்ந்தனர். பெற்றோர்கள் உணவுகளை வீட்டிற்கு எடுத்துச் செல்ல பொட்டலம் கட்டினர்.

     மதியம் 1.00 மணிக்குச் சிற்றுண்டி தினம் ஒரு நிறைவுக்கு வந்தது. பொறுப்பாசிரியர்களும் மாணவர்களும் தத்தம் கூடாரங்களைப் பிரித்து, அவ்விடத்தைச் சுத்தம் செய்தனர். அனைவரும் மகிழ்ச்சியுடன் உணவு பொட்டலங்களோடு வீடு திரும்பினர். இச்சிற்றுண்டி தினத்தின் வழி பள்ளிக்குப் பெரும் லாபம் கிட்டியது. இத்தினத்தின் வழி மாணவர்கள் வியாபார நடைமுறைகளைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டனர்.

அறிக்கை தயாரித்தவர்,                                                                             12.8.2011

கையொப்பம்

( ராஜா த/பெ பெரியசாமி )

செயலாளர்,

சிற்றுண்டி தின ஏற்பாட்டுக் குழு,

பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி, மலாக்கா

Advertisements

One thought on “அறிக்கை – சிற்றுண்டி தினம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s