எனக்கு ஒரு மந்திரக்கோல் கிடைத்தால்…..

எனக்கு ஒரு மந்திரக்கோல் கிடைத்தால்…..

       அன்று இரவு உணவு உண்டபின் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த மந்திரப்படத்தை என் பெற்றோருடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படத்தில் மந்திரக்கிழவி ஒருத்தி தன்னிடம் உள்ள ஒரு மந்திரக்கோலால் பலவித சாகசங்களைத் செய்து கொண்டிருந்தாள். அவள் செய்த மந்திரச் செயல்கள் என் விழிகளைத் தொலைக்காட்சி பெட்டியிலிருந்து அகற்ற மறுத்தன. அத்தகைய மந்திரக்கோல் ஒன்று எனக்குக் கிடைத்தால்….கற்பனைகள் சிறகைக் கட்டிக் கொண்டு கேட்பாரற்று பறக்கத் தொடங்கின.

       எனக்கு மந்திரக்கோல் கிடைத்தால், முதலில் என் தாயாரின் நோயைப் போக்குவேன். சில காலமாகவே என் தாயார் ஏதோ ஒரு கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு, நடக்கவும் முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். என்னைப் பெற்று வளர்த்த பேசும் தெய்வம் பழைய நிலையை அடைந்து, மீண்டும் எங்களிடம் கலகலப்பாகப் பழக இம்மந்திரக்கோலைப் பயன்படுத்திக் கொள்வேன்.

       அடுத்து, ஓர் அழகான பெட்டியை வாங்குவேன். அப்பெட்டியில் எப்பொழுதும் பணம் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்வேன். பணம் குறையும் போதெல்லாம் மந்திரக்கோலைக் கொண்டு பணத்தை நிரப்புவேன். அதனால் என் குடும்பம் வறுமைப் பிடியின் கோரத்திலிருந்து மீளும். மிகப்பெரிய வீடு, அழகான கார் போன்றவற்றை வாங்கிக் கொள்வோம். ஏழைகளாக உள்ள எங்கள் உறவினர்கள் மட்டுமின்றி, நண்பர்களுக்கும் பண உதவி செய்வேன்.

       தற்போது நம் நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல் போன்ற தீயச்செயல்கள் தலைவிரித்து ஆடுகின்றன. எனக்கு மந்திரக்கோல் கிடைத்தால் இத்தகைய குற்றங்கள் புரியும் பாதகர்களை நானே தண்டிப்பேன்.  என் மந்திரக்கோலை அனுப்பி, அவர்களை ஆசை தீர அடிக்குமாறு சொல்வேன். அவர்கள் தவறு செய்யும் போதெல்லாம், என் மந்திரக்கோல் அவர்களைத் தண்டிக்குமாறு சொல்வேன். இதன் மூலம், நாட்டில் நடக்கும் தவறான செயல்களைக் களைவதில் நானும் பங்காற்ற முடியும்.

       எனக்கு மந்திரக்கோல் கிடைத்தால்,  என் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்யச் சொல்வேன். துணி துவைத்தல், சமைத்தல், வீடு கூட்டுதல், பாத்திரங்கள் கழுவுதல், வாகனம் கழுவுதல், வீட்டிற்கு வண்ணப்பூச்சு பூசுதல் போன்றவற்றைச் செய்யச் செய்வேன். இதனால், என் தாயாரும் அக்காவும் சிரமப்படாமல்  தங்கள் வேலைகளைக் கவனிக்க முடியும். வீட்டு வேலைகளும் எளிதில் முடியும்.

       கற்பனைகள் எவ்வளவு அழகானவை. நாம் நினைக்கும் அனைத்தும் நடந்தால்……! அச்சமயம், நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்ற பழைய பாடல் என் செவிமடல்களைத் தட்டியது. அப்பா, அலைவரிசையைத் தமிழ்ப்படத்திற்கு மாற்றி விட்டார். நான் சிரித்துக்கொண்டே, என் வீட்டுப்பாடங்களைச் செய்வதற்கு அறைக்குச் சென்றேன்.

Advertisements

5 thoughts on “எனக்கு ஒரு மந்திரக்கோல் கிடைத்தால்…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s