நட்பு

‘நட்பில்லா மனிதன் என்றால் அவனொரு மனிதன் இல்லை. நட்புக்கே உயிரைத் தந்தால் அவனைப் போன்று புனிதன் இல்லை’. இதுவொரு பாடலின் வரியாகும். நட்பு என்பது ஒருவர் தெரியாத வேறொருவரிடம் பழகி, அவரைப் புரிந்து கொண்டு இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்வதோடு தக்க சமயத்தில் உதவி புரிவதாகும். மேலும், வழி தவறும் பொழுது அன்புடன் இடித்துரைத்து ஒருவரை நல்வழிக்கு இட்டுச் செல்வதே நல்ல நட்புக்கு இலக்கணமாகும். நட்பு என்னும் சொல் சினேகம் அல்லது தோழமை எனப் பொருள்படும்.

நட்பு நிழலைப் போன்றது; எங்குச் சென்றாலும் நம்முடனே வரும். ஒரு மனிதனின் நட்பு எங்குத் தொடங்குகிறது என்றால் அவன் வசிக்கும் அண்டை வீட்டிலிருந்தான் என்று கூறலாம். சிறுபிள்ளை முதல் நட்பு அண்டை வீட்டிலிருந்துதான் தொடங்கிறது பிறகு, அச்சிறுவன் பள்ளிப் பருவம் அடைந்தவுடன் அச்சிறுவனுடைய நட்பு விரிவடைகிறது. அச்சிறுவன் மேலோங்கி வளர வளர பலதரப்பட்ட நட்பு அவனுக்குக் கிட்டுகிறது. நட்பு கிடைப்பது எளிது; ஆனால், அந்த நட்பை விட்டுப் பிரிவது மிக மிக அரிது. ஒருவரிடம் நாம் நட்பு கொண்டு சந்தர்ப்பச் சூழ்நிலையால் பிரிந்து விட்டாலும் அந்த நட்பு எக்காலத்திலும் அழியலாகாது அல்லது மறக்க முடியாது.

 நல்லவர்களிடம் கொள்ளும் நட்பு நமக்கு நன்மையே தரும். தீயவர்களிடம் கொள்ளும் நட்பு நம்மைத் தீய வழியில் கொண்டு சென்று நமது வாழ்க்கையே அழித்துவிடும். மேலும், தீயவர்களிடம் கொள்ளும் நட்பு நீண்ட நாள் நிலத்திருக்காது. எடுத்துக்காட்டாக, ஒரு மாணவன் பள்ளியில் நன்கு சிறந்து விளங்கும் மாணவனுடன் நட்பு வைத்திருந்தால் அவனுக்குத் தெரியாத பாடங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வான். அம்மாணவன் தன் நண்பனிடம் உள்ள நன்நெறிகளைக் கற்றுக் கொள்வான். தன் நண்பனைப் போல் தானும் சிறந்து விளங்க வேண்டும் என எண்ணமும் மனத்தில் உருவாகும். அதனால் அம்மாணவன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வாய்ப்புண்டு.

 ஆனால், தீய மாணவர்களிடம் கொண்ட நட்பானது பெரும் ஆபத்தை விளைவிக்கும். எடுத்துக்காட்டாகப், பள்ளியில் ஒரு மாணவன் தீய நண்பர்களின் நட்புக் கொண்டால் தீய எண்ணங்கள் மனத்தில் பதியும். பிறகு, வழக்கம் போல் வெண்சுருட்டு, போதைப்பொருள் எனத் தீய பழக்கங்கள் வந்து சேரும். ‘பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் தின்னும்’ என்பது போல நாம் தீயவர்களிடம் நட்பு வைத்திருந்தால் நாமும் தீயவர்களே.

வெறும் சிரித்துப் பேசி மகிழ்வது நட்பாகாது. இருவருள் ஒருவர் நெறி கடந்து செல்லும்போது, இன்னொருவர் முற்பட்டு இடித்துரைத்துத் திருத்துவதே ஆகும். முகம் மட்டும் மலர நட்புகொள்வது நட்பாகாது. அன்பால் உள்ளமும் மலருமாறு நட்புகொள்வது உண்மையான நட்பாகும். திருவள்ளுவர் நட்பைப் பற்றி என்ன கூறுகின்றார் என்றால்,

             ‘முகநக நட்பது நட்பன்று: நெஞ்சத்து

              அகநக நட்பது நட்பு’

 தற்போதைய காலகட்டத்தில், ஒருவரிடம் பணம் மற்றும் பேரும் புகழும் இருக்கும் வரைதான். அவனிடம் கொள்ளும் நட்பு நிலைத்து இருக்கும். எப்பொழுது பணம் இல்லாமல் தவிக்கிறாரோ, அவரிடம் கொண்ட நட்பைத் துண்டித்து விடுவார்கள். துன்பக் காலத்தில் கைவிட்டுவிடுவார்கள். இப்படிப்பட்ட செயல் நட்புக்குக் துரோகம் செய்வதற்குச் சமமாகும். சிலர் ஒருவனிடம் நட்பு கொள்வது போல் இருந்து, இறுதியில் அவருக்கு ஏதாவது ஒரு தீங்கு செய்து விடுவர். காரியம் இருக்கும்வரை காலைப்பிடித்துக் கொண்டு, காரியம் முடிந்தவுடன் கண்டும் காணாமல் போகும் பொய்யான நட்பை உடனடியாக விட்டுவிட வேண்டும்.

 மனிதனுக்கு மனிதன் நட்புக் கொள்வது போல் நாட்டுக்கு நாடு நட்பு கொள்ளுதல் வேண்டும். நாட்டுக்கு நாடு கொள்ளும்  நட்பு பல வகைகளில் நமக்கு நன்மையே கொண்டுவருகிறது. நாட்டுக்கு நாடு நட்பு கொள்வதால் உதவி புரியும் மனப்பான்மை, புரிந்துணர்வு மற்றும் விட்டுக்கொடுக்கும் போக்கையும் நம்மால் கடைப்பிடிக்க முடிகிறது. ஏதாவது ஒரு சிக்கல் ஏற்பட்டால் நட்புறவின் வழி சிக்கலைத் தீர்க்க முடிகிறது. இதனால், நாட்டிக்கு நாடு போர் நடப்பைத் தடுக்க வழி செய்கிறது. நாட்டுக்கு நாடு கொள்ளும் நட்பால் வாணிபத்துறையும் மேலும் வளர்ச்சியடைய துணை புரிகிறது. இதனால், நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி கண்டு வருகிறது.

 சுருங்கக் கூறின், திருவள்ளுவர் கூறும் கருத்து என்னவென்றால்,

         ‘குணனும் குடிமையும் குற்றமும் குன்றா

         இனனும் அறிந்துயாக்க நட்பு’ ,

 அதாவது ஒருவனுடைய குணத்தையும் குடிபிறப்பையும், குற்றத்தையும் குறைவற்ற சுற்றதையும் ஆராய்ந்து அவனோடு நட்புக் கொள்ள வேண்டும். பொய்யான நட்பு கொள்ளும் நண்பர்களை விட்டுவிட வேண்டும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s