நான் ஒரு நீர்ப்புட்டி

நான் ஒரு நீர்ப்புட்டி நான் மனிதனால் உருவாக்கப்பட்டேன். நான் பல வடிவங்களிலும் வர்ணங்களிலும் இருப்பேன். என்னை மனிதர்கள் பயன்படுத்துவர். குறிப்பாகப் பள்ளி மாணவர்கள் என்னை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். என்னுள் நீர் இருக்கும். இப்பொழுது தெரிகிறதா நான் யாரென்று ? ஆம், நான்தான் நீர்ப்புட்டி. நான் ஜொகூர் பாருவில் உள்ள ஒரு நீர்ப்புட்டி தொழிற்சாலையில் பிறந்தேன். என்னுடன் சேர்ந்து பல ஆயிரக்கணக்கான நண்பர்களும் பிறந்தார்கள். நான் உருளை வடிவில் இருப்பேன். நான் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் இருப்பேன்.…

நான் ஒரு பாடப்புத்தகம்

‘அன்று வள்ளுவன் கையிலே நான் ஓர் எழுத்தோலை, இன்று மாணவன் கையிலே நான் ஒரு பாடப்புத்தகம்” .ஆம், மாணவர்களே! நான்தான் ஒரு பாடப்புத்தகம். வானவில்லின் ஏழு வர்ணங்கள்தான் என் முகப்பின் அடையாளங்கள். நான் நனிச்சிறந்த ஆசிரியர்களின் எழுத்து வண்ணத்தில் உதித்தேன். என்னுடன் பல உடன்பிறப்புக்கள் பிறந்தனர். மலேசியாவின் பிரபலமிக்க உமாபதிப்பகம் என்னை அச்சடித்தது. “தமிழ்மொழி ஆறாம் ஆண்டு” என்று தலைப்பிட்டு என்னை வெளியிட்டனர். என் மேல் ரிம.12.00 விலை அச்சடிக்கப்பட்டிருந்தாலும் மலேசியக்கல்விஅமைச்சால் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவேன் என்பதை…